கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில் , 1190 என்ற இடத்தில் இருந்து ஏற ஆரம்பித்து, கிட்டத்தட்ட 1600 என்ற புள்ளிவரை தொடர் ஏற்றத்தில் இருந்தது. இந்தத் தொடர் ஏற்றத்தின் புல்பேக் ரேலியாக பின் 1485 என்ற புள்ளிவரை இறங்கியது. அதன்பின், தன் ஏற்றத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  ஆனாலும், முந்தைய உச்சமான 1600-ஐ தாண்டிய நிலையில் கொஞ்சம் சிரமப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

சென்ற வாரம் சொன்னது… “தற்போதைய தடைநிலை 1675 ஆகும். இதைத்தாண்ட முடிய வில்லையென்றால் இறக்கம் தொடரலாம்.  கீழே ஆதரவு முந்தையத் தடைநிலையான 1590 ஆகும்.’’

மென்தா ஆயில் சென்ற வாரம், திங்களன்று ஒரு கேப் டவுன் மூலம் துவங்கியது. 1620 என்ற புள்ளியில் துவங்கி, பின் படிப்படியாக ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றமே, அடுத்து பலமாக மாறி, நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1675 என்ற புள்ளியைத் தொட்டது; கொஞ்சம் உடைத்து ஏறவும் முயற்சி செய்தது. அடுத்து செவ்வாயன்று சற்றே சிறிய கேப்அப் மூலம், அதாவது 1695 என்ற உச்சத்திலிருந்து துவங்கி படிப்படியாக இறங்கி 1628 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டு, பின் 1647 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1590 தக்கவைக்கப்பட்டுள்ளது.  அடுத்தடுத்த நாள்களில் மென்தா ஆயில், ஒரு பக்கவாட்டு நகர்விலேயே நகர்ந்துகொண்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick