கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 22 - கடன்... கவனி... வாங்கு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

வ்வளவுதான் சம்பாதித்தா லும், நம் நிம்மதியை நிலைகுலையச் செய்துவிடு கிறது நாம் வாங்கிய கடன். வாழ்க்கையில் நாம் இன்றிருக்கும் நிலையிலிருந்து நம்மை உயர்த்த உதவும் திட்டத்துக்காக கடன் வாங்குவதில் தவறில்லை. ஃபிரிட்ஜ் வாங்கக் கடன், ஏ.சி வாங்கக் கடன், டூவீலர் கடன் என எடுத்ததெற்கெல்லாம்  நாம் கடன் வாங்கினால், அதிலிருந்து மீண்டுவர முடியாத அளவுக்கு மோசமான நிலையை எட்டிவிடும். கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங் களை நிதி ஆலோசகரும், மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி சொல்கிறார்...

1. இந்தக் கடன் தேவையா?

எந்தவொரு கடனை வாங்கும்முன், அந்தக் கடனை ஏன் வாங்க வேண்டும், அதனால் நமக்கு என்ன லாபம், இந்தக் கடன் வாங்குவதால் மாதாந்திர பட்ஜெட்டில் பாதிப்பு உருவாகுமா  என்கிற ரீதியில் யோசித்து முடிவெடுத்தால்,  தேவையில்லாத கடனைத் தவிர்க்கலாம்.

2. எதிர்கால வருமானம் நிச்சயமல்ல

சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த ஒருவர், அடுத்த மூன்று வருடங்களில் பெரிய அளவில் சம்பள உயர்வு இருக்கும் என்ற கணிப்பில், தகுதிக்கு மீறி கடனை வாங்கி வீட்டைக் கட்டிவிட்டார். பிறகு எதிர்பாராத சூழலில் அவருக்கு வேலை இழப்பு ஏற்படவே, இ.எம்.ஐ செலுத்த முடியாமல் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். இவரைப்போல எதிர்கால வருமானத்தை நம்பி கடனை வாங்காதீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick