காபி கேன் இன்வெஸ்டிங் - 13 - முதலீட்டில் வெளியாளாக இருப்பதின் அனுகூலங்கள்! | Coffee Can Investing - Nanayam Vikatan | நாணயம் விகடன்

காபி கேன் இன்வெஸ்டிங் - 13 - முதலீட்டில் வெளியாளாக இருப்பதின் அனுகூலங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ல்ல விமர்சகர்கள், எந்த விஷயத்தையும் எதற்காகச் செய்யப்படுகிறதோ, அந்த நோக்கம் நிறைவேறுகிறதா என்று பார்த்து தங்களுடைய விமர்சனங்களை வைப்பார்களே தவிர, சுற்றியிருக்கும் மற்றவர்களுடைய தாக்கம் அவர்களுக்குள் சற்றும் ஏற்பட விடமாட்டார்கள். மூளையில் பயம் என்பது செயல்படும் இடமான அமிக்டலாவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்க நன்கு கற்றுக்கொண்டிருக்கும் அவர்கள், ஏனையவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தை அறவே கொண்டிருக்க மாட்டார்கள். சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் நட்புவட்டத்திலுமே அவர் என்ன சொல்கிறார்/செய்கிறார் என்பதை அனைவரும் பார்க்க ஆவலுடன் இருக்குமாறு செய்வார்களேதவிர, ஏனையவர்களின் தாக்கத்தை உருவாக்கிக்கொள்ள மாட்டார்கள். (Gregory Berns எழுதிய ‘Iconoclast: a Neuroscientist Reveals How to Think Differently’ (2010) புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட வாசகம் இது.)

வெளியாட்களே வால்ஸ்ட்ரீட்டில் பெரும் வெற்றி பெற்றுள்ளனர்

ஜார்ஜ் சோரஸ், புதாபெஸ்ட் நகரில் பிறந்தவர். ஜெர்மானிய நாஜி ஆக்கிரமித்த ஹங்கேரியில் தப்பிப் பிழைத்து அந்த நாடு ரஷ்யாவின் துருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டபின் இங்கிலாந்திற்கு 1947-ம் ஆண்டு குடியேறியவர். இங்கிலாந்தில் படித்துமுடித்தபின் அவர் மீண்டு நாடுவிட்டு நாடு செல்ல முயன்று அமெரிக்காவிற்குச் சென்றார்.

மிக்கேல் ஸ்டெய்ன்ஹார்ட் என்பவர், அமெரிக்க யூதக் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய அப்பா சோல் ஃப்ராங்க் ஸ்டெய்ன்ஹார்ட் என்பவர் ஒரு பிறவி சூதாடி. அதுமட்டுமல்ல, நியூயார்க் நகரில் திருட்டு நகைகளை வாங்கும் நபராகவும், அதை வாங்கி விற்றதற்காக பத்து வருட ஜெயில் தண்டனையையும் அனுபவித்தவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick