மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் சாமானிய மக்கள்! | Ordinary people investing in Mutual Fund - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/11/2018)

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் சாமானிய மக்கள்!

“மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பெரும் பணக்காரங்களுக்குத்தான். நம்ம மாதிரியான சாதாரண மனுஷங்களுக்கு அதெல்லாம் ஒத்துவராது’’ என்கிற எண்ணம்தான் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. குறைந்தது 100 ரூபாய்கூட மியூச்சுவல் ஃபண்டில்  முதலீடு செய்யலாம் என்கிற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் சாதாரண மனிதர்கள் மூன்று பேரைத் தேடிப்பிடித்து அவர்களைப் பேட்டி கண்டோம். நாம் முதலில், பாண்டிச்சேரியிலிருந்து திண்டிவனம் போகும் பாதையில் அமைந்துள்ள கிளியனூரில் பால் வியாபாரம் செய்துவரும்   எம்.கோபாலகிருஷ்ணனைச் சந்தித்தோம்.

‘‘எனக்கு இரண்டு மகன்கள். எனது பால் வியாபாரத்தில் கிடைக்கும் வருமானத்தி லிருந்து ஒருபகுதியை கடந்த ஏழு ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவருகிறேன்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்கும்போது எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எனது நண்பராக இருக்கும் நிதி ஆலோசகர் தந்த தைரியத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் தொடங்கினேன். முதலில், என் மகனின் திருமணச் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யத் தொடங்கினேன். அது நல்ல வருமானம் தந்ததால், இன்னொரு மகனின் திருமணச் செலவுக்காக 1,000 ரூபாயை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யத் தொடங்கினேன். தொடர்ந்து எனது ஓய்வுக்கால நிதிக்காக 5,000 ரூபாயை முதலீடு செய்துவருகிறேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close