அள்ளித் தரும் அக்ரி பிசினஸ்!

டி பிசினஸில்தான் அதிக வருமானம்  சம்பாதிக்க முடியும் என்பதல்ல; அக்ரி பிசினஸிலும் அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என்கிறார்கள். விவசாயம் ஒரு தொழிலல்ல... அதுவொரு வாழ்வியல் முறை என்று பலர் சொன்னாலும்,  விவசாயத்தின்மூலம் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும் என்பதைப் பலரும் நிரூபித்து வருகின்றனர்.

இந்தியாவின் காலநிலை வேளாண் உற்பத்திக்கு சாதகமாக இருக்கிறது. சிலபல பாதிப்புகள் அவ்வப்போது இருந்தாலும், விவசாய விளை பொருள் உற்பத்தி பெருகிக்கொண்டு வருகிறது. உள்நாட்டில் விவசாய விளைபொருள்களுக்குத் தேவை அதிகரித்து வருவது ஒருபக்கம் இருக்க,   வெளிநாடுகளிலும் நல்ல சந்தை வாய்ப்பைப் பெற்று வருகின்றன.

இதைத் தெரிந்துகொண்டவுடன், நாமும்  விவசாயத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாமே என்கிற கேள்வி எழும். இந்தக் கேள்விக்கான பதிலை இனி நாம் பார்ப்போம்.

பல மடங்கு லாபம் தரும் பழங்கள்

ஆண்டு பயிரான பழப் பயிர்களில் எலுமிச்சை, மா, பப்பாளி, கொய்யா, நெல்லி, புளி ஆகியவை விற்பனை வாய்ப்புள்ளவை. இதிலும் மா, புளி போன்றவை அதிக பராமரிப்பு தேவைப் படாதவை. சொல்லப்போனால், மானாவாரி பயிர் என்றே சொல்லலாம். கிடைக்கும் மழையை வைத்தே வளர்ந்துவிடும்.

பழப் பயிர்களில் நல்ல வருமானத்தைக் கொடுத்து வருவதில் எலுமிச்சைக்கு முக்கியமான இடம் உண்டு. எலுமிச்சைக்குப் பிரத்யேக சந்தைகளே உண்டு. மகசூலும் விற்பனையும் ஒருங்கே அமைந்த பயிர் இது. ஏக்கருக்கு ஓர் ஆண்டில் 6 லட்சம் பழங்கள் கிடைக்கும். ஒரு பழத்தின் விலை 1 ரூபாய் என்றால்கூட 6 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதேபோல, பப்பாளியில் ஏக்கருக்கு ஒரு கிலோ 7 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. 7 ரூபாய் என்று வைத்துக்கொண்டால்கூட 60 டன் மகசூல் கிடைக்கும். 4 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick