அரசு இலவசப் பொருள்கள்... ‘வேண்டாம்’ - விஜய் சர்கார், ‘வேண்டும்’ - தமிழக சர்கார்! | Tamilnadu government Freebies - Nanayam Vikatan | நாணயம் விகடன்

அரசு இலவசப் பொருள்கள்... ‘வேண்டாம்’ - விஜய் சர்கார், ‘வேண்டும்’ - தமிழக சர்கார்!

தேர்தல் கமிஷன் தொடங்கி, உச்ச நீதிமன்றம் வரையில் விவாதப் பொருளாக இருக்கும் இலவசத் திட்டங்கள், செல்லுலாயிடிலும் பெரும் கருத்து மோதல்களை சமீபத்தில் உருவாக்கியது. தமிழக அரசின் இலவசப் பொருள்களைத் தீயில் வீசிய சர்கார் படப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோது சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினார்கள்.

இந்தியாவின் பல மாநிலங்களில், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இலவசத் திட்டங்கள் இடம்பெறுவது, பல்வேறு மாநில அரசுகள் இலவசத் திட்டங்களை அமல்படுத்துவது என இவற்றுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்தது தமிழகம்தான். 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கைதான் இதில் புதிய பரிமாணத்தை எட்டியது. இலவச கலர் டி.வி, இரண்டு ஏக்கர் நிலம், காஸ் ஸ்டவ் என கலர் மத்தாப்பு காட்டிய அந்த அறிக்கைதான், ‘தேர்தல் கதாநாயகன்’ என்று வர்ணிக்கப்பட்டது. தி.மு.க போட்ட அந்தப் பாதையில் பிற்பாடு அ.தி.மு.கவும், அகில இந்திய கட்சிகளும் பயணிக்கிறது.
 
இலவசத் திட்டங்கள்மூலம் அரசுப் பணத்தை விரயமாக்குவதில் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் கொஞ்சமும் சளைக்கவில்லை. இலவசத் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒரு துறையையே உண்டாக்கியது 2011-ல் ஆட்சிக்கு வந்த        அ.தி.மு.க அரசு. ‘‘இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் அரசின் பணத்தை வாரி இறைத்து கஜானாவை காலி செய்துவருகிறார்கள்’’ என விமர்சனங்கள் எழுந்தபோதும், ‘விலையில்லாத்’ திட்டங்கள்’ என வீராப்புப் பேசினார்கள் ஆட்சியாளர்கள்.  இலவசத் திட்டங்கள் சமூக, பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வந்தபோதும் ஏட்டிக்குப் போட்டியாக ஆட்சியாளர்கள் நடத்தும் அக்கப்போருக்கு இலவசத் திட்டங்கள்தான் பகடைக் காய்களாக மாறுகின்றன. அதற்கு உதாரணம், இலவச கலர் டி.வி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick