சொந்த வீடு... சிக்கல் இல்லாமல் வாங்குவது எப்படி?

வீட்டைக்  கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்’ என்பது போன்ற பழமொழி சொந்த வீடு வாங்குவதன் முக்கியத்துவத்தை, வீட்டைக் கட்டுவதில் இருக்கும் சிரமத்தை நமக்கு உணர்த்தும். ஒரு வீட்டையோ, மனையையோ சிக்கலில்லாமல் வாங்கும் சூத்திரம் குறித்து நவீன்ஸ் ஹவுஸிங்  நிர்வாக இயக்குநர் ஆர்.குமார் சொல்கிறார். 

“நம் வாழ்க்கையில் எவ்வளவோ பொருள்கள் வாங்குகிறோம். ஆனால், வீடு, மனை வாங்குவது, மற்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். அதிக விலை கொண்டது; மதிப்புமிக்கது; பலருக்கும் இது வாழ்நாளில் ஒருமுறை வாய்த்தாலே பெரிய மகிழ்ச்சிகரமான விஷயம். அந்த அளவிற்கு வாழ்நாள் கனவாகவே இருக்கிறது. ஒருவரின் ஆண்டு வருமானத்தைவிட பலமடங்கு செலவழித்து வாங்கக்கூடிய விஷயம் இது. அதேபோல, ஒருவரின் சொந்த வீட்டுக்கும் அவருக்கும் ஓர் உணர்வுபூர்வமான பந்தம் இருக்கும். வீடு என்பது ஒருவருக்கே மட்டுமல்லாது, அவரது குடும்பத்திற்கே சுற்று வட்டாரத்துடன் பந்தத்தை ஏற்படுத்தக் கூடியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick