தொழிலில் ஜெயிக்க வைக்கும் பிசினஸ் இங்கிலீஷ்! | Business English to succeed in business - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/11/2018)

தொழிலில் ஜெயிக்க வைக்கும் பிசினஸ் இங்கிலீஷ்!

ங்கிலத்தில் எளிதாகப் பேச, படிக்க, எழுத நினைப்பது நம்மில் பலருக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது. தொழில் செய்பவர்கள் முதல் வேலை தேடுபவர்கள் வரை ஆங்கில அறிவு நன்றாக இருந்தால், அவர்கள் துறையில் ஜொலிக்க முடியும் என்பதே இன்றைய யதார்த்தம்.  ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் இந்த ஆங்கிலப் பயிற்சியை அருமையாக எடுத்துத் தருகிறது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான கேம்பிரிட்ஜ் அசெஸ்மென்ட் இங்கிலீஷ் என்கிற அமைப்பு.

உலகமெங்கும் ஆங்கில மொழித்திறனை வளர்ப்பதற்காக பல்வேறு வகைப் பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என அனைத்துப் பிரிவினருக்குமான பயிற்சிகளை வேறு சில அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்து கின்றன. இந்த அமைப்பின் தெற்காசிய மண்டலத்தின் இயக்குநராகச் செயல்படும் அருணாசலம், அவர்களது பயிற்சியின் தேவை, பயிற்சி முறை குறித்து நம்மிடம் விளக்கினார். அவர் சொன்னதாவது...

“அடிப்படையில் எங்களது நிறுவனம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அங்கமாக செயல்படும் அமைப்பாகும். இந்த அமைப்பு, இந்தியாவிலுள்ள பல்வேறு அமைப்புகளின், கல்வி நிறுவனங்களின், கார்ப்பரேட் நிறுவனங்களின் பிணைப்புடன் ஆங்கில மொழித்திறன் பயிற்சிகளை வழங்குகிறது. அதேபோல, இந்த அமைப்பு, பயிற்சியாளர் களை உருவாக்கும் வேலையைத்தான் செய்கிறது. அந்த பயிற்சியாளர்கள்தான் மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும் பயிற்சியளிக்கும் பணியைச் செய்கிறார்கள். 

[X] Close

[X] Close