வால்மார்ட் பங்குகளை வாரன் பஃபெட் விற்றது ஏன்?

வாரன் பஃபெட்டின்  பெர்க்‌ஷையர்  ஹாத்வே, வால்மார்ட்டின் மொத்த பங்குகளையும் விற்றிருக்கிறது. இதன் மூலம் வால்மார்ட் நிறுவனத்தில்  வாரன் பஃபெட் கடந்த இருபது ஆண்டுகளாக வைத்திருந்த முதலீடு முடிவுக்கு வந்துள்ளது.

வால்மார்ட்டின் பங்குகளை விற்றதற்குப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. வால்மார்ட்டின் பிசினஸ் உத்தியானது புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கடினமாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் பஃபெட். சில்லறை விற்பனைத் தொழிலை நேரடியாகச் செய்துபார்த்த அனுபவம் வாரன் பஃபெட்டுக்கு உண்டு.

அதேசமயம், அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சி, வாரன் பஃபெட்டின் சிந்தனையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பெர்க்‌ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அமேசான்   நிறுவனம் வளர்ச்சியடைந்து வருவதாகச் சொல்லியிருக்கிறார் வாரன் பஃபெட். ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஒரு ட்ரில்லியன் விற்பனை இலக்கைத் தொட்ட இரண்டாவது நிறுவனம் என்றால், அது அமேசான்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick