நேற்று வழிகாட்டினார்.... இன்று சொத்துகளை இழந்தார்!

சுமதி மோகனப் பிரபு

யூக வணிகத்தில் ஆப்ஷன்(Option) முறையில் சிலர் பெரும் பணத்தைச் சம்பாதித்த வர்கள் பலர். இந்த ஆப்ஷனை எப்படி வாங்குவது, விற்பது என்பது பற்றி எழுதியவர் ஜேம்ஸ் கோர்டியர். கடந்த வாரம் இயற்கை எரிவாயு கமாடிட்டி சந்தை இவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி வைத்தியத்தைத் தந்தது.

இயற்கை எரிவாயு கால் ஆப்ஷன் களைப் பெருமளவு விற்பனை செய்திருந்த ஜேம்ஸ் கோர்டியர், திடீரென்று இயற்கை எரிவாயு கமாடிட்டி ஒரு நாளில் 20% அதிகரிக்க, தனது மொத்தப் பணத்தையும் சந்தையில் இழந்தது மட்டுமல்லாமல், அவர் நடத்திவந்த optionsellors.com என்னும் ஹெட்ஜ் ஃபண்டில் முதலீடு செய்துள்ள 290 முதலீட்டாளர்களின் மொத்தப் பணத்தையும் இழந்தார்.

சுமார் 150 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பு ரூபாய் ஆயிரம் கோடிக்கும் மேல்) மதிப்புள்ள பணத்தை ஒரே வாரத்தில் தொலைத்தற்காக கண்ணீரும் கம்பலையுமாக, தனது முதலீட்டாளர் களிடம் யூட்யூப் வீடியோ மூலம் ஜேம்ஸ் கோர்டியர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick