பிசினஸ், ஷேர் மார்க்கெட் டிரேடிங்... மன அழுத்தத்திலிருந்து தப்பிக்கும் வழிகள்!

ஜி.லட்சுமணன்

சிறு தொழிலோ, பெரிய நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் ஒரு தொழிலைத் தொடங்கி நடத்த பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க முடியாதவர்கள்,  மனஅழுத்தத்திலும், மனஉளைச்சல் என மனரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகி, மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்தச் சவால்களை எதிர்கொள்வது பற்றி உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்திடம் கேட்டோம்.

“தொழிலதிபர்களாக இருப்பதில் எவ்வளவு சௌகர்யங்கள் இருக்கிறதோ, அதே அளவு எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் அதிகம். நாம்தான் கடைசி, லாபமோ, நஷ்டமோ நாம்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று பயம் இருந்துகொண்டே இருக்கும். எனவே,  இப்படி ஆகிவிடுமோ, எல்லாவற்றையும் இழந்துவிடுவோமோ என்ற எதிர்மறை எண்ணங்களே அதிகம் வரலாம்.  

அப்போது சில மனரீதியான போராட்டங்கள் நடக்கும். முதலில், அவர்கள் தன்மீதே நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். இதுபோன்ற சிக்கலான விஷயங்களை நம்மால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று தன்னையே சந்தேகிக்கத் தொடங்கிவிடு வார்கள். அடுத்து கீழ்நிலையில் இருப்பவர்களிடமோ, சகதொழிலதிபர்களிடமோ, குடும்பத்தினரிடமோ, யாரிடமும் ஆலோசிக்க ‘ஈகோ’ தடுக்கும். முடிவில், இப்படி எல்லாம் ஆகிவிடுமோ என்று எதிர்மறையாக எண்ணத் தொடங்கிவிடுவார்கள். இவை அத்தனையும் மூளையில் உட்கார்ந்துகொண்டு, எதுவும் நடக்காமலே அவர்களைக் கடுமையான மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கிவிடும். இதற்கான தீர்வுகள் சுலபமானவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick