ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்... புதிய வேலைவாய்ப்பை உருவாக்குகின்றனவா?

வாசு கார்த்தி

முன்பெல்லாம் படிக்கும் மாணவர்கள், பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தனர். ஆனால், தற்போது இந்த நிலைமை மாறி இருக்கிறது. படித்து முடித்தவுடன் நிறுவனம் தொடங்குவது, அல்லது புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்னும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதற்கு சமீபத்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வெற்றியே மாணவர் களின் சிந்தனை மாற்றத்துக்குக் காரணம்.

பொதுவாக, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்படுவது அதிகரித்திருக்கிறது என்றாலும், இது குறித்த புள்ளிவிவரங்கள் முழுமையாக இல்லை. சமீபத்திய டை சென்னை நிகழ்ச்சியில் இதுவரை எவ்வளவு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப் பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதியில் தொடங்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த அறிக்கையை ஐ.ஐ.டி பேராசிரியர் எ.தில்லை ராஜன் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் அவர் சொல்லி யிருப்பதாவது... 

‘‘கடந்த 2000-ம் ஆண்டு முதல் இதுவரையில் 12.60 லட்சம் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப் பட்டிருக்கின்றன. இவற்றில் முதலீட்டுக்கேற்ற வகையில் உள்ள தொழில் நிறுவனங்களின்  எண்ணிக்கை 2.75 லட்சம் மட்டுமே. இவற்றில் வென்ச்சர் கேப்பிட்டல் நிதி கிடைத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெறும் 6,214 மட்டுமே. இவற்றிலிருந்து வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் வெற்றிகர மாக வெளியேறியது, 1,624 ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலிருந்து மட்டுமே.

பெங்களூருவில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதாவது, 21.7 சதவிகித நிறுவனங்களுக்கு அதிக வென்ச்சர் கேப்பிட்டல் முதலீடு கிடைத்திருக்கிறது. மாறாக, சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனங்களில், 1.2% நிறுவனங்களுக்கு மட்டுமே வென்ச்சர் கேப்பிட்டல் நிதி கிடைத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்