எளிய எண்ணம்... பாசிட்டிவ் மாற்றம்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : Brutal Simplicity of Thought

ஆசிரியர் : Lord Saatchi

பதிப்பகம் : Ebury Press


திதீவிரமாக முனைந்து எதையும் எளிமைப்படுத்தும் சிந்தனையின் மகத்துவத்தையும், அது எப்படி உலகத்தை மாற்றியது என்பதையும் சொல்லும் புத்தகம் ‘ப்ரூட்டல் சிம்ப்ளிசிட்டி ஆஃப் தாட்.'  அதிதீவிர எளிமைப்படுத்தும் சிந்தனை எப்படி உலகை மாற்றியது என்பதைப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக்கொண்டு சொல்கிறது இந்தப் புத்தகம். ஒரு பக்கத்திற்கு ஒரு விஷயம் என்று நான்கே வரிகளைக் கொண்டிருப்பதால் புத்தக அமைப்பிலும் தீவிர எளிமையைக் கொண்டி ருக்கிறது எனலாம். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் புத்தகம் சாட்சி நிறுவனத்தில் பணிக்குச் சேர்பவர்களுக்கான பயிற்சிக்கு உபயோகப்படுத்தப்பட்டு, தொடர் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. கேள்வி - பதில் அடிப்படையில் இருக்கும் இந்தப் புத்தகம் சுவாரஸ்யமான பல தகவல்களை நமக்குத் தருகிறது.

நடக்கவே வாய்ப்பில்லாத விஷயங்களை நடத்த நீங்கள் நினைத்தீர்கள் என்றால், அதிதீவிர எளிமைப்படுத்துதல் என்ற ஒரு செயலே உங்களுக்கு உதவுவதாக இருக்கும் என்று சொல்லி ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

 இந்த நிலையை அடைய வெற்றுப்பேச்சு, அற்பமான சிந்தனை, சின்ன விஷயங்களில் நாட்டம் போன்றவையெல்லாம் உங்களுக்கு மிகவும் பிடிக்காத விஷயமாக இருக்க வேண்டும். அப்படி ஆன பின்பே உங்களுடைய மூளை வைக்கோலில் இருந்து, நெல்மணிகளை பிரித்துத்தரும் கதிரடிக்கும் இயந்திரமாக மாற ஆரம்பிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick