நீங்களும் நிதி ஆலோசகர் ஆகலாம்! | You can also become a financial advisor! - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/11/2018)

நீங்களும் நிதி ஆலோசகர் ஆகலாம்!

மிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல பணக்கார முதலீட்டாளர்களை  மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்கள் உருவாக்கி வருகிறார்கள். இதற்கு இடையே இப்படிப்பட்ட நிதி ஆலோசகர்களை ஒருவர் உருவாக்கி வருகிறார். அவர்தான், எஸ்.பி.சண்முகம். இவர் மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகராக இருக்கிறார். இவர், சென்னை தியாகராய நகரில்  ‘ஷான்வெல்த்’ என்கிற பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் நிதி ஆலோசனை பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இனி அவர் பேசுகிறார்....

“நான் சி.ஏ இன்டர்மீடியேட் முடித்துள்ளேன். நிதி ஆலோசகருக்கான சான்றிதழ் பெற்றுள்ளேன். இந்தத் துறையில் கடந்த 15 வருடங்களாக இருக்கிறேன். பத்து ஆண்டுகள் நிதி ஆலோசகராகப் பணியாற்றியபோது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து மக்களிடையே சரியான விழிப்பு உணர்வு இல்லை. எனவே, அவர்களுக்கு இதுகுறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த விரும்பினேன். அந்தப் பணியில் நான் ஒருவன் மட்டுமே ஈடுபட்டால் செய்துமுடிக்க பல காலம் பிடிக்கும். தனி ஒருவனாக விழிப்பு உணர்வு ஊட்டுவது எளிதான செயலல்ல. அதிகபட்சம் ஆயிரம் பேருக்கு என்னால் விழிப்பு உணர்வைக் கொண்டுவர முடியும். ஆனால், எனது இலக்கு ஒரு லட்சமாக உள்ளது. எனவே, அதற்காக ஒரு குழுவை உருவாக்குவது சரியாக இருக்கும் என்று உணர்ந்தேன்.

[X] Close

[X] Close