ஷேர்லக்: மிட்கேப் பங்குகள் எச்சரிக்கை!

ஓவியம்: அரஸ்

ஜா புயலைத் தொடர்ந்து, இன்று (வியாழக்கிழமை) காலை முதலே மழை. எனவே, வீட்டிலிருந்தபடியே உமது கேள்விக்குப் பதில் சொல்கிறேன்'' என்று வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பியிருந்தார் ஷேர்லக். அவருக்கான கேள்விகளை அனுப்பி வைத்தோம். அடுத்த அரை மணி நேரத்தில் அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அனுப்பி வைத்தார்.

சி.பி.எஸ்.இ இடிஎஃப் மூலம் மேலும் ரூ.8,000 கோடியைத் திரட்ட மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளதே! 

“சி.பி.எஸ்.இ இ.டி.எஃப் (CPSE ETF) -ஐ ரிலையன்ஸ் நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்டில் மேலும் ரூ.8,000 கோடி நிதி திரட்டப்படவிருக்கிறது. இந்த இடிஎஃப்-ல் புதிதாக முதலீடு செய்பவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு விலையில் 4.5% தள்ளுபடி அளிக்கிறது. 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் முதலீடு செய்யலாம்.'' 

பி.டி.சி இந்தியா பங்குகள் எஃப் அண்டு ஓ பிரிவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது ஏன்?

“என்.எஸ்.இ-ல் பி.டி.சி இந்தியா பங்குகள் எஃப் அண்டு ஓ பிரிவிலிருந்து 2019 பிப்ரவரியிலிருந்து நீக்கப்படுகிறது. செபியின் விதிமுறைகளின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது  இந்தப் பங்குக்கு நடைமுறையில் இருக்கும் நவம்பர், டிசம்பர், ஜனவரி கான்ட்ராக்ட்கள் அவற்றின் முதிர்வு வரைக்கும் வர்த்தகமாகும்.''

டாக்டர் ரெட்டீஸ் பங்குகள் ஒரே நாளில் 6% அதிகரித்திருக்கிறதே?

“காப்புரிமை தொடர்பாக டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்துக்கு ஆர்டர் ஒன்றை அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை இந்த நிறுவனப் பங்கின் விலை ஒரேநாளில் 5.9% அதிகரித்தது.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick