பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரம், நிஃப்டி அதன் 200 நாள் மூவிங் ஆவரேஜ் இலக்கு நிலையான 10780 அருகே செல்லும்விதமாகச் செயல்படும் எனச் சொல்லியிருந்தோம். அது நடந்திருக்கிறது. ஆனால், வியாழன் மாலையில் சந்தை இறக்கம் கண்டதால், நிஃப்டி 10527-க்கு இறங்கியது.

திங்கள்கிழமை பங்குச் சந்தை கேப்அப் வர்த்தகத்தைத் தொடங்கியது. நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் அதன் இலக்கு நிலையை நோக்கி நகர்ந்து கேப்அப்பை அடைந்தது. இந்த நிலையில், லாப நோக்கம் கருதிப் பங்குகள் விற்கப்பட்டதால், இறக்கம் கண்டது. கடந்த சில வாரங்களாக இதுதான் இலக்கு என அறியப்பட்டிருந்தால், இப்படி பிராஃபிட் புக்கிங் நடந்திருப்பது ஆச்சர்யமான விஷயமில்லை. மேலும், அமெரிக்கச் சந்தையும் இறக்கத்தில் ஆரம்பித்ததால், பிராஃபிட் புக்கிங் அவசர அவசரமாக நடந்திருக்கிறது. அதேசமயம், இந்த பிராஃபிட் புக்கிங் சந்தையைப் பெரிதாகப் பாதித்துவிடவில்லை. அதிகமான பங்குகள் விற்கப்படவில்லை. லாங்க் பொசிஷன்கள் மட்டும் அதிகமாக சரண்டர் செய்யப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick