முதலீட்டு லாபத்தில் முந்தும் பங்குச் சந்தை!

நாணயம் விகடன் 2005 டிசம்பர்  மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அது இரு வார இதழாக (15 நாள்கள்) இருந்தது. நாணயம் விகடன் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரைக்கும் பல்வேறு முதலீடுகள் என்ன லாபம் கொடுத்திருக்கிறது என்பதை ஆராய்ந்தோம்.  

2006 ஜனவரி முதல் 2018 அக்டோபர் வரையில் தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த திட்டங்கள், பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். நாணயம் விகடன் தொடங்கிய இந்த 13 ஆண்டு காலத்தில் ஒருவர் எஃப்.டி-யில் மட்டுமே முதலீடு செய்திருந்தால், சுமார் 7.69% வருமானத்தை ஈட்டியிருப்பார். தங்கத்தில் மட்டும் முதலீடு செய்திருந்தால், அவருக்கு 8.87% வருமானம் கிடைத்திருக்கும். பங்குச் சந்தையில்  ஃபண்டில் மட்டும் முதலீடு செய்திருந்தால், அவருக்கு 17.56% வருமானம் கிடைத்திருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick