ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 2 - லார்ஜ்கேப் ஃபண்டுகள்! | Fund types A view and few recommendations - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/12/2018)

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 2 - லார்ஜ்கேப் ஃபண்டுகள்!

லார்ஜ்கேப் ஃபண்டுகள் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய ஃபண்ட் வகை ஆகும். இவ்வகைப் ஃபண்டுகள் இந்தியாவில் உள்ள, சந்தை மதிப்புப்படி, டாப் 100 நிறுவனப் பங்குகளுக்குள்தான் முதலீடு செய்யும். அந்த டாப் நிறுவனங்களை ஆம்ஃபி தனது இணையதளத்தில் ஆறு மாதத்துக்கு ஒருமுறை வெளியிடும். கடந்த ஜூன் 30, 2018 நிலவரப்படி ஆம்ஃபி வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள டாப் 100 நிறுவனங்களின் பட்டியலை (https://www.amfiindia.com/research-information/other-data/categorization-of-stocks) பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இந்த 100 நிறுவனப் பங்குகளுக்குள்தான், லார்ஜ்கேப் ஃபண்டு களின் 80 சதவிகித போர்ட்ஃபோலியோ இருக்க வேண்டும். மீதமுள்ள 20 சதவிகிதத்தை ஃபண்டுகள், தங்களின் பார்வைக்கு ஏற்ப லார்ஜ், மிட் அல்லது ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்துகொள்ளலாம்.

பட்டியலில் கொடுத்துள்ளதுபோல இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் டி.சி.எஸ் ஆகும். இதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ரூ.6,10,000 கோடியாகும். கிட்டத்தட்ட ரூ.31,000 கோடி சந்தை மதிப்புடன், 100-வது இடத்தில் உள்ள நிறுவனம் கோல்கேட் பாமோலிவ் ஆகும். இந்த டாப் 100 நிறுவனங்களின் சராசரி சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கும் மேலாகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close