சந்தை ஏற்ற இறக்கம்... ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு ஏற்றதா? - ‘எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்’ ஆர்.ஸ்ரீனிவாசன்

ங்கு சார்ந்த முதலீடுகளில் கால்நூற்றாண்டுக்கு மேல் அனுபவம் கொண்டவரும்    எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஈக்விட்டி பிரிவின் தலைவருமான ஆர்.ஸ்ரீனிவாசன் நாணயம் விகடனுக்கு அளித்த சிறப்பு பேட்டி... 

 இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சிறந்ததா? மாற்று முதலீடு ஏதாவது இருக்கிறதா?

“பொதுவாக, நேரடி பங்கு முதலீடு மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இவை இரண்டில் எது சிறந்தது என்றால் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் எனச் சொல்லலாம். காரணம்,   பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வணிகம் மற்றும் அந்த நிறுவனங்களின் பங்குகள் பற்றி மதிப்பீடு செய்ய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் பிரத்யேக குழு இருக்கிறது. அவர்களின் பணி சிறப்பாக, நேர்த்தியாக இருக்கும் என்பதால் சாதாரண முதலீட்டாளர்களைப் பொறுத்தவரையில் நேரடி பங்கு முதலீட்டைவிட ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு லாபகரமாக இருக்கும். 

மாற்று முதலீடு என்கிறபோது, ரியல் எஸ்டேட், தங்கம், கடன் சார்ந்த ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவை இருக்கின்றன. இந்த முதலீடுகள் எந்தக் காலகட்டத்தில் லாபகரமாக இருக்கும் என்று சொல்வது கடினம். எனவே, முதலீட்டை லாபகரமாக மாற்ற அஸெட் அலோகேஷனைப் பின்பற்றுவது நல்லது. மேலும், பிரித்து முதலீடு செய்ததை குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வுசெய்து தேவைப்பட்டால் முதலீட்டை மாற்றி அமைப்பது அவசியம்.” 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்