ரூபாயின் மீட்சிப் பயணம் தொடருமா?

சுமதி மோகனப் பிரபு

ரலாறு காணாத அளவுக்கு (ரூ.74.48) வீழ்ச்சி அடைந்த பிறகு, இந்திய ரூபாய் இழந்த மதிப்பை, கடந்த மூன்று வாரங்களில் ஓரளவுக்கு (சுமார் ரூ. 4) மீட்டெடுத்துள்ளது. மீட்சிக்கான காரணங்களையும், ரூபாய் மீட்சிப் பயணம் தொடருமா என்பது பற்றியும் இங்கு பார்ப்போம்.

கச்சா எண்ணெய் வீழ்ச்சி

உலகின் கச்சா எண்ணெய் மொத்த இருப்பில், சுமார் 10% கொண்டுள்ள ஈரானிடமிருந்து நவம்பர் மாதம் முதல் யாரும் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்ற அமெரிக்காவின் மிரட்டலின் காரணமாகவும் மத்திய ஆசியாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் தொடர்ச்சியாகவும், கச்சா எண்ணெயின் விலை முந்தைய ஆறு மாதங்களில் வெகுவாக உயர்ந்தது.

ஆனால், திடீர் திருப்பமாக, இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு ஈரான் இறக்குமதி தடையிலிருந்து விலக்கு என ட்ரம்ப் அறிவித்தது, கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், உலகப் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்படும் என சமீபத்திய சமிக்ஞைகளினால், கச்சா எண்ணெய்க்கான தேவை குறையும் என்ற கவலையும் சேர்ந்துகொள்ள கச்சா எண்ணெய் 30% வரை தடாலடியாகக் குறைந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்