சர்வதேச முதலீட்டாளர் மாநாடு... தயார் நிலையில் தமிழகம்! | Global Investors Summit in Tamilandu - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/12/2018)

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு... தயார் நிலையில் தமிழகம்!

ர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்துவருகிறது தமிழக அரசாங்கம். இந்த மாநாடு குறித்த முக்கியமான விஷயங்களைத் தொழில்முனை வர்களுக்கு எடுத்துச்சொல்லும் ரோட்ஸோ, இந்தியாவின் முக்கிய நகரங்களிலும், லண்டன், பிரான்ஸ், அமெரிக்கா என முக்கிய நாடுகளிலும் நடந்தி முடிந்தபின், கடைசிக் கட்டமாக தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை ஆகிய மூன்று ஊர்களிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக மதுரையில் நடந்த ரோட்ஸோ, வருகிற ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சென்னையில் நடக்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக அமையும் என்பதற்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது.

மதுரையில் நடந்த ரோட்ஸோவில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் கே.ஞானதேசிகன், தொழில் வழிகாட்டு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையத்தின் நிர்வாக துணைத் தலைவர் எம்.வேல்முருகன் ஐ.இ.எஸ் (ஓய்வு) உள்பட நான்கு அதிகாரிகள் கலந்துகொண்டு, தொழில் முன்னேற்றத்துக் காகத் தமிழக அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். மதுரை, சிவகாசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் என ஏழு தென் மாவட்டங் களிலிருந்து பல நூறு தொழில்முனைவர்கள் இந்த ரோட்ஸோவுக்கு வந்திருந்தனர்.

[X] Close

[X] Close