“அவள் விகடன் விருது என் ஊழியர்களால்தான் சாத்தியமானது!”

சாதனைப் பெண்களின் சங்கமமாக நடந்து முடிந்துள்ளது, ‘அவள் விகடன் விருதுகள் 2018’ நிகழ்ச்சி. நவம்பர் 24  அன்று சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடந்த இந்நிகழ்ச்சி, தத்தமது களங்களில் கலக்கிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட் அப்! பல துறை வெற்றிப் பெண்களும் மேடையேறி விருதினைப் பெற்ற தருணமும், தங்கள் உழைப்பால் பெற்றவெற்றி பற்றி பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும், அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோருக் குத் தன்னம்பிக்கையை ஊட்டியது.

இந்த ஆண்டுக்கான ‘பிசினஸ் திலகம்’ விருதைப் பெற்றவர், சென்னையைச் சேர்ந்த தொழில்முனைவோர் மலர்விழி. தன் வறுமையை உடைத்தெறிந்து, ‘பிளாக் பிரின்டிங் சாரீஸ்’ பிசினஸில் இன்று
70 பேருக்கு வேலைவாய்ப்புக் கொடுக்கும் முதலாளியாக உயர்ந்த மலர்விழியின் கதையை, மேடையில் அழகாக விவரித்தது வீடியோ காட்சி. பிறகு நடிகை வாணி போஜன் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர்  வாசுகி பாஸ்கர் இருவரும், மலர்விழியைக் கட்டித்தழுவி, அவருக்கு விருது வழங்கி வாழ்த்தினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்