நிஃப்டியின் போக்கு: ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்! | Nifty Expectations: Traders page - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/12/2018)

நிஃப்டியின் போக்கு: ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

எஃப் & ஓ எக்ஸ்பைரிக்கு உண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம் என்றும், 10650 என்ற லெவலுக்குக் கீழேயே இருக்கும்பட்சத்தில் 10420 என்ற லெவலிலேயே ஒரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம்.

10489 மற்றும் 10922 என்ற எல்லைகளைத் தொட்ட நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 350 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. 10750-க்கு மேலேயே தொடர்ந்து வால்யூமுடன் நடக்கும்பட்சத்தில் 11000 என்ற லெவலைத் தொட்டுவிடுவதற்கான வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் மீண்டும் 10650 என்ற லெவலிலேயே சப்போர்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வரும் வாரத்தில் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகள் வெளிவர இருக்கிறது. அதனையொட்டியே சந்தையின் மூவ்களும் இருக்க வாய்ப்புள்ளது. புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் நல்ல ஃபண்டமென்டல்கள் கொண்ட ஸ்டாக்குகளில் மட்டும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் வியாபாரம் செய்ய முயற்சி செய்யலாம். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களைத் தவிர்ப்பதே நல்லது. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய காலகட்டமிது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

[X] Close

[X] Close