ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 3 -

ங்கு சார்ந்த முதலீடுகளில் குறைவான ரிஸ்க் உடைய லார்ஜ்கேப் ஃபண்ட் வகையைப் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். இதற்கு நேரதிரானவை ஸ்மால்கேப் ஃபண்டுகளாகும். இவை அதிக ரிஸ்க் உடையவை மற்றும் அதிக வருமானம் தரக்கூடியவை. இந்த வகை ஃபண்டுகள்  இந்தியாவில் உள்ள சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும். இந்த ஃபண்டுகள் இந்தியாவில் உள்ள, சந்தை மதிப்பின்படி, டாப் 250 நிறுவனப் பங்குகளைத் தாண்டி முதலீடு செய்யும்.

செபியின் அறிவிப்பின்படி, இந்த ஃபண்டுகள் குறைந்தது 65% ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். எஞ்சியதை லார்ஜ், மிட் அல்லது ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்துகொள்ளலாம். செபியின் வரையறையின்படி, இந்தியாவில் உள்ள அனைத்துப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களையும் சந்தை மதிப்பின்படி வரையறைப்படுத்தும்போது, டாப் 250 நிறுவனங்கள் அல்லாதவை ஸ்மால்கேப் நிறுவனங்கள் எனப்படுகின்றன. இன்றைய சந்தை மதிப்பின்படி, சுமார் ரூ.10,000 கோடிக்குக்கீழ் உள்ள நிறுவனங்கள் ஸ்மால்கேப் நிறுவனங்கள் என அழைக்கப்படு கின்றன. ஸ்மால்கேப் கேட்டகிரியின் மொத்த சந்தை மதிப்பு ரூ.21 லட்சம் கோடிக்கும் மேலாகும். உதாரணம்: ஸ்மால்கேப் கேட்டகிரியில் உள்ள சில ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகள்: கரூர் வைஸ்யா பேங்க், சியட், டி.டி.கே பிரஸ்டீஜ், கஜாரியா செராமிக்ஸ், விகார்ட், எஸ்.கே.எஃப் பியரிங்ஸ், பேட்டா இந்தியா, ஈக்விட்டாஸ் பேங்க், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், ராம்கோ சிஸ்டம்ஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick