காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 14 - பங்குச் சந்தை... பலவீனமான இ.பி.எஸ் வளர்ச்சி கெட்ட செய்தி அல்ல! | Coffee Can Investing - Nanayam Vikatan | நாணயம் விகடன்

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 14 - பங்குச் சந்தை... பலவீனமான இ.பி.எஸ் வளர்ச்சி கெட்ட செய்தி அல்ல!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ழு சதவிகித பொருளாதார வளர்ச்சி என்கிற அளவில் வளர்ச்சியடையும் போதும்கூட, இந்திய நிறுவனங்களின் இ.பி.எஸ் வளர்ச்சி என்பது பெரிய அளவில் வளர்ச்சி அடையாமல் இருப்பது குறித்த தேவையற்ற கவலை ஒன்று சந்தையில் நிலவுகிறது. இதுபோன்ற சூழல் இந்தியப் பொருளாதாரத்திற்கு நல்லதே. எப்படி?

பொருளாதாரம் வளர்கிறது. வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்குகிறார்கள். ஆனால், நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. விற்பனை அதிகரித்து லாபம் அதிகரிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? வாடிக்கையாளர்களுக்கு நல்லதொரு விலையில் பொருள்கள் கிடைக்கிறது என்றுதானே அர்த்தம்? இந்த நிலை தொடர்ந்தால் நிறுவனங்கள் தங்களுடைய செயல்திறனை அதிகரிக்கவும், செலவினங்களைக் குறைக்கவும் ஆரம்பிக்கும்.

   ஜி.டி.பி வளர்ந்தும் இ.பி.எஸ் அதிகரிக்காத நிலை

கடந்த நவம்பர் 12-ம் தேதியிட்ட பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளிதழில் கடந்த பத்து ஆண்டுகளில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இ.பி.எஸ்-ன் வளர்ச்சி 4.1 சதவிகிதமாகவும், அதேசமயம், நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி கிட்டத்தட்ட 12.9 சதவிகிதமாகவும் இருந்தது என்று ஒரு செய்தி வந்திருந்தது. இந்தச் செய்தி வந்த அதே சமயத்தில் இதுகுறித்து வெளியான ஒரு அயல்நாட்டுப் பங்குத் தரகு நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிக்கையும் வந்து, “என்னதான் ஆயிற்று இந்தியாவிற்கு...” என்று  கேட்க வைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick