கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி | Commodity trading Agri products - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில் 31.10.2018 அன்று உச்சமாக 1846-ஐ தொட்டபிறகு இறங்கி முடிந்தது. அதனால், அன்று ஷூட்டிங் ஸ்டார் வகையான கேண்டில் தோன்றியது.  அதன்பிறகு விலை சற்றே இறங்க ஆரம்பித்தது.  இந்த இறக்கம் 05.11.18 வரை தொடர்ந்து, குறைந்தபட்ச புள்ளியாக     1731-ஐ தொட்டது. அதற்கடுத்து ஐந்து நாள்களும் தொடர்ந்து வலிமையாக ஏறினாலும், முந்தைய உச்சமான 1846  என்ற எல்லைக்கு அருகில் வலிமையாகத் தடுக்கப்பட்டு கீழே இறங்கியது. 

முதல் சில தினங்கள் கொஞ்சம் தட்டு தடுமாறி இறங்கினாலும், அதற்கடுத்து 19.11.18 அன்று 1770 என்ற புள்ளியில் துவங்கி 1724 என்ற எல்லையில் முடிந்தது. இது ஒரு மருபாசு வகை பியரிஷ் கேண்டில் ஆகும்.  அதற்கடுத்த நாள் 1714 என்ற புள்ளியில் கேப்டவுனின் மூலம் இறங்கத் துவங்கி, பின் வலிமையான இறங்கி 1655 என்ற எல்லையைத் தொட்டு அந்த எல்லையிலேயே முடிந்தது.  அதுவும் ஒரு மருபாசு வகை பியரிஷ் கேண்டில் ஆகும்.  

அடுத்த 21.11.18 அன்று தொடர்ந்து ஒரு கேப்டவுனில் 1650 என்ற புள்ளியில் துவங்கி கீழே குறைந்தபட்சமாக 1589 என்ற புள்ளியைத் தொட்டு மீண்டது. அதன்பின் அதுவே ஒரு புல்பேக் ரேலியாக மாறி, அடுத்த ஒரு வாரம் மெள்ள மெள்ள ஏறி உச்சமாக 1703 என்ற புள்ளியைத் தொட்டபிறகு, மீண்டும் கரடிகள் கைக்கு சந்தை மாறியது. அடுத்தடுத்த பலமான இறக்கங்கள் புதிய பாட்டத்தைத் தோற்று வித்துள்ளது.

இனி என்ன செய்யலாம்..?

மென்தா ஆயில் பலமான இறக்கத்திற்குப் பிறகு, 1580 என்ற எல்லையை உடனடி ஆதரவாக எடுத்துள்ளது.  மேலே 1650 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick