செல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவுமா? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

செல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவுமா?

செல்பேசியில் வைத்திருக்கும் டிரைவிங் லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் பாலிசியை போக்குவரத்து போலீஸாரிடம் காட்டினால் அபராதம் விதிப்பதிலிருந்து தப்பிக்க முடியும் என நண்பன் கூறுகிறான். இது உண்மையா?

ராஜ்குமார், விழுப்புரம்

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்


“ ‘மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989’ சட்டப்பிரிவு 139-ன் படி, காவல்துறையினர் வாகனச்சோதனை செய்யும்போது ஆர்.சி புக், காப்பீட்டு ஆவணம், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை காவல்துறையிடம் காண்பிக்க வேண்டும். ஆனால், மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், கடந்த நவம்பர் 19-ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில் காவல்துறையினர் கேட்கும் ஆவணங்களை செல்பேசிமூலம் ஒளிப்பட நகலாகவும் காண்பிக்கலாம் என்று கூறியுள்ளது. எனவே, உங்கள் நண்பன் கூறியுள்ளபடி இனிமேல் செல்பேசி வழியாகவே அனைத்து ஆவணங்களையும் காண்பிப்பது சட்டப்படி செல்லுபடியாகும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick