காலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி! | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/12/2018)

காலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : மை மார்னிங் ரொட்டீன் (My Morning Routine)

ஆசிரியர் : Benjamin Spall and Michael Xander

பதிப்பகம் : Portfolio Penguin


திகாலையில் எழுந்து அன்றைக்குச் செய்யவேண்டிய செயல்களைக் குறித்துத் திட்டமிடுகிறவர்கள், பெரிய அளவில் வெற்றி பெறுகிறார்கள் எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் அவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுகிறோம்..?

நீங்கள் காலை எட்டு மணிக்குத் திடுக்கென எழுந்து, காலை உணவைக்கூட  சாப்பிடாமல் அவசர அவசரமாக வேலைக்குச் சென்றிருக்கிறீர்களா? வெற்றி பெற்ற பல மனிதர்கள் எப்படி அந்த வெற்றியை அடைந்தார்கள், அவர்கள் செய்வதில் எதை நான் செய்வதில்லை, என்னுடைய வாழ்க்கையில் நான் முழு அளவிலான கட்டுப்பாட்டைப் பெறுவது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் சிந்தித்திருக்கிறீர்களா...?