முதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

வெளிநாடுகளில் மூன்று கோடிக்கும் அதிகமான என்.ஆர்.ஐ-கள் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்) உள்ளனர்.  என்.ஆர்.ஐ-களின் செல்வ மதிப்பு சுமார் 1 ட்ரில்லியன் டாலராக (சுமார் 73 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் ஜி.டி.பி-யில் 40% ஆகும். என்.ஆர்.ஐ-களின் எண்ணிக்கையில் கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் என்.ஆர்.ஐ-களுக்கான நிதி அம்சங்கள் என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம்.

 என்.ஆர்.ஐ-கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யும்போது அவசியம் கவனிக்கவேண்டிய பல அம்சங்கள் உள்ளன. என்.ஆர்.ஐ-கள் சம்பாதிப்பதுடன்,  தங்கள் தாய்நாட்டில் முதலீடு செய்வது மற்றும் வரி விதிப்பு போன்ற வற்றையும் கூடுதலாகக் கையாள வேண்டியிருக்கிறது. இதனால், இரு (நாடுகளின்) அமைப்புகள் மற்றும் விதிமுறைகள் என்ஆர்ஐ-களை சிக்கலுக்கு உள்ளாக்கிவிடுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick