கால் நூற்றாண்டைக் கடந்த ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது இந்தியாவில் 11% மக்களைச் சென்றடைந்திருக்கிறது. இந்த முக்கியமான இலக்கை எட்டுவதற்குக் காரணமாக அமைந்த முக்கியமான நிறுவனம் என்றால் அது ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்தான். இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் தனியார் நிறுவனமான இது,  நமது சென்னையைச் சேர்ந்தது என்பதில் நாம் நிச்சயம் பெருமைப்படலாம். இதன் ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட் மற்றும் ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் ஆகிய இரு ஃபண்டுகள் கடந்த டிசம்பர் 1-ம் தேதியுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்தி ருக்கிறது. இந்த 25 ஆண்டுகளில் இந்த நிறுவனம் அடைந்த வளர்ச்சியானது வியப்பானது. அந்த வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1991-ம் ஆண்டு பட்ஜெட்டில்தான் இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்குமுன், மியூச்சுவல் ஃபண்ட் துறையில் யூ.டி.ஐ முக்கியமான நிறுவனமாக இருந்தது. இந்த அனுமதி தரப்படுவதற்கு சில ஆண்டுகளுக்குமுன், எஸ்.பி.ஐ நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் பிரிவு தொடங்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick