ஜி.டி.பி குழப்பங்கள் ஏன்?

மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி அடங்கியிருக்கிறது ஜி.டி.பி குறித்த கணக்கீடு. 2004-05 முதல் 2011-12 வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) குறித்த புள்ளிவிவரங்கள் (2011-12 வரிசை), சமீபத்தில் மத்திய புள்ளியியல் நிறுவனத்தால் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவிலுள்ள புள்ளியல் அமைப்புக்களின் ஆஸ்தான அமைப்பாகக் கருதப்படும் தேசிய புள்ளியியல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்ட ஜி.டி.பி எண்களிலிருந்து மாறுபட்டு இருந்ததால், முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம் எழுந்தது. மேலும், தன்னாட்சி அமைப்புகள் வெளியிட வேண்டிய பொருளாதார புள்ளிவிவரங்களை, அரசியல் சார்புள்ள நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டது புதிய சர்ச்சையையும்  எழுப்பியுள்ளது.

   அடிப்படை ஆண்டு மாற்றல் அவசியமே

ஜி.டி.பி மதிப்பீடுகள், புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படும் காலகட்டத்தின் பொருளாதாரச் சூழ்நிலைகளைச் சரியாகப்  பிரதிபலிக்க வேண்டும் என்பதால், அடிப்படை ஆண்டு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றி அமைக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் இதுவரை ஏழு முறை அடிப்படை ஆண்டுகள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. கடைசியாக, 2004-05-ம் ஆண்டின் மொத்த பொருளாதார உற்பத்தியை 100 என்ற அடிப்படையாகக் கொண்ட அளவுகோலின் உதவியுடன் ஜி.டி.பி வளர்ச்சி 2014 நிதியாண்டு வரை கணக்கிடப்பட்டு வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick