பெண்கள் கைகொடுத்தால் பொருளாதாரம் எவ்வளவு உயரும்? | Influence and hands of women in economy - Nanayam Vikatan | நாணயம் விகடன்

பெண்கள் கைகொடுத்தால் பொருளாதாரம் எவ்வளவு உயரும்?

ந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய ஆண்களின் எண்ணிக்கைக்கு சரிசமமாக இருக்கிறார்கள் பெண்கள். ஆனால், இன்றைக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. தற்போது குடும்பத்தினரின் தேவைகளை மட்டுமே நிறைவேற்றுகிற பெண்கள், வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் தொடங்கினால், நம் நாட்டின்  பொருளாதாரம் எந்த அளவுக்கு வளர்ச்சியடையும், இதனால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்படி சரிசமமான நிலை உருவாகும் என்பது குறித்து சென்னையில் உள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் ஒரு கருத்தரங்கை நடத்தியது. இதில், பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தில் பொருளாதாரத்தில் பெண்களும் கலந்துகொள்ளும் பட்சத்தில் எவ்வளவு வலிமை (Power of Parity) பெற முடியும் என்பது குறித்த தகவலை மெக்கென்ஸி நிறுவனம் வெளியிட்டது.

மெக்கென்ஸி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் சுருக்கமான வடிவம் இதுதான்.

* வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்கு மிகவும் குறைவாக இருக்கிறது. ஆசியா பசிபிக் பகுதியில் பெண்களின் பங்களிப்பை உயர்த்து வதன்மூலம் 2025-ம் ஆண்டில் இந்த பிராந்தியத்தில் 4.5 லட்சம் டாலர் அளவுக்கு ஜி.டி.பி மதிப்பை உயர்த்த முடியும். இந்தியாவில் பெண்களின் பங்களிப்பை உயர்த்துவதன் மூலம் 77,000 கோடி டாலர் அளவுக்கு ஜி.டி.பி மதிப்பு உயரும். இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு 25 சதவிகிதம்தான். இந்திய ஜி.டி.பி-யில் பெண்களின் பங்களிப்பு      11 சதவிகிதம்தான். இது மிகவும் குறைவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick