குறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்?

ரியாக இரண்டு மாதங்களுக்குமுன் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்் 100 டாலரைத் தொடும் என்கிற தகவல்கள் வெளியாகி, எல்லோரையும் கதிகலங்க வைத்தது. அப்படி விலை உயர்ந்திருந்தால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தொட்டிருக்கும். நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்காமல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைய ஆரம்பித்தது.

சென்ற நவம்பர் கடைசியில் கச்சா எண்ணெய் விலை ஒரே தினத்தில் 8 சதவிகிதத்துக்கு மேல் இறக்கம்கண்டது. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்த அதிகபட்ச விலையிலிருந்து, தற்போது 30% வரை விலை குறைந்து, சாதாரண மனிதர் களின் மனதில் பால் வார்த்திருக்கிறது. 

கடந்த வியாழக்கிழமை மாலை அன்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 53.36 டாலராக வர்த்தகமாகி வருகிறது. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கும்கீழ் இறங்கக்கூடும் என்று சிலர் ஆரூடம் சொல்கிறார்கள். 2014-ம் ஆண்டின் குறைந்தபட்ச விலையான 27 டாலருக்கும் கீழ் இறக்கமடையவும் வாய்ப்புண்டு என சிலர் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

 கச்சா எண்ணெய் விலை இப்படி மாறி, மாறி ஏறி இறங்கும்போது, அது தொடர்பான பங்குகளின் விலையும் ஏறி, இறங்கவே செய்யும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick