வீட்டுக் கடன் தவணை... தாமதமானால் என்ன பாதிப்பு?

கேள்வி - பதில்

நான் தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளேன். வீட்டுக் கடன் தவணை கட்டத் தாமதமானால் வசூலிக்கப்படும் அபராதத்தொகை மற்ற வங்கிகளோடு ஒப்பிடும் போது அதிகமாக இருக்கிறது. இந்தத் தொகையை எப்படிக் கணக்கிடுகிறார்கள்?

செந்தில் குமார், திருநெல்வேலி

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி, சங்கரன்கோவில்

“வீட்டுக் கடனுக்கான தவணை கட்டத் தாமதமானால் விதிக்கப்படும் அபராதத் தொகை, வங்கிக்கு வங்கி மாறுபடக்கூடியது. இவ்வளவுதான் வசூலிக்கவேண்டுமென்று வரையறையை ரிசர்வ் வங்கி விதிக்கவில்லை. வாடிக்கையாளரின் காசோலை, பவுன்ஸ் செய்யப்பட்டால் அதற்கு வங்கியின் சார்பில் அபராதத் தொகை விதிக்கப்படும். கூடுதலாக அந்த நிதிநிறுவனத்தின் சார்பாகவும் அபராதத்தொகை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அதற்கான தொகை அதிகமாக இருக்கலாம்.

பொதுவாக, பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் வங்கி களில் அபராதத்தொகை சற்று அதிகமாக இருக்கும். இப்படி செக் பவுன்ஸ் ஆவதால் கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தவறவிடாமல் தவணைத் தொகையைக் கட்டிவருவது நல்லது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick