லண்டன் நீதிமன்றத் தீர்ப்பு... இந்தியாவுக்கு வருவாரா விஜய் மல்லையா?

வாசு கார்த்தி

டந்த திங்கள்கிழமை மாலை பரபரப்பான பல செய்திகள் வெளியாகி, எல்லோரையும் திக்குமுக்காட வைத்தன. ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தி வந்த சில நிமிடங்களிலேயே, விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கில் லண்டன் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று, இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்திருக்கும் விஜய் மல்லையா மீண்டும் இந்திய அரசின் விசாரணைக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தை இந்தத் தீர்ப்பு உருவாக்கியிருக்கிறது.

   என்ன தீர்ப்பு?

கிங்ஃபிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்தார். இந்திய வங்கிகளில் வாங்கிய ரூ.9,000 கோடி செலுத்தாதது மற்றும் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் இவர்மீது போடப்பட்டன. இந்த வழக்குகளில் தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்டு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், மல்லையா நேரில் ஆஜராகவில்லை. மேலும், கடனைத் திரும்பச் செலுத்தும் தகுதி இருந்தும் திரும்பச் செலுத்தாதவர்களின் (willful defaulter) பட்டியலிலும் இவர் பெயர் இடம் பெற்றது.

இந்தியாவில் உள்ள இவரது சொத்துகளை விற்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அந்த முயற்சிகள் வெற்றியடைய வில்லை. இவரது சொத்துகளை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.
 
இதற்கிடையே மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான சட்டப் போராட்டம் தொடர்ந்து நடந்துவந்தது. இந்த வழக்கு தொடர்பாக, தான் இந்தியாவுக்குச் செல்லக் கூடாது என்பதற்காகப் பலவிதமான தடுப்பாட்டங்களை விஜய் மல்லையா கையாண்டார்.

முதலில், லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் விதிவிலக்குக் கோரினார். அதனைத் தொடர்ந்து இவர்மீது போடப் பட்டிருக்கும் வழக்கு அரசியல் பழிவாங்கல் என்று வாதிட்டார். பிற்பாடு, இந்திய சிறைகள் எனக்கேற்றதாக இல்லை என்றும் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick