பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்கு வழி!

ம்ஃபி (AMFI) அமைப்பும், நாணயம் விகடனும் இணைந்து `இன்றைய முதலீடு எதிர்காலத்தில் கைகொடுக்கும்’ என்ற நிகழ்ச்சியை சமீபத்தில் சேலத்தில் நடத்தின. நிகழ்ச்சியில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்கள் வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் பி.மோகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் மோகன் பேசும்போது, தவணைமுறைத் திட்டங் களில் அதிக செலவு செய்து கடன் சிக்கலில் மாட்டிக்கொள்வது குறித்து பார்வையாளர் களின் அனுபவத்திலிருந்தே உணரவைத்தார். ஒவ்வொருவரும் முதலீட்டின்மீது அக்கறை கொள்ளாமல் செலவுகளை மட்டுமே பெருக்கிவரும் தவறைச் சுட்டிக்காட்டினார். ஒருவர் வருமானத்தைத் திட்டமிட்டுப் பெருக்குவதுடன், அந்த வருமானத்தைச் சிறந்த முறையில் முதலீடு செய்வது எவ்வளவு அவசியம் என்பதை விளக்கினார். நம்மிடம் எத்தனைவிதமான முதலீட்டு முறைகள் இருக்கின்றன என்பதைப் பட்டியலிட்டு, இவற்றில் பாதுகாப்பான மற்றும் சரியான முதலீட்டு முறையாக மியூச்சுவல் ஃபண்ட் விளங்குவதை விரிவாக எடுத்துக்கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick