ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 5 - வரியைச் சேமிக்க உதவும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்!

மார்ச் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நம்மில் பலரும் வருமான வரியைச் சேமிக்க கடைசி நிமிட ஆலோசனையில் இருப்போம். அவ்வாறு ஆலோசித்துக் கொண்டிருப்பவர்களுக்காக, செபி வகைப்படுத்திய ஃபண்ட் வகைகளில் ஒன்றான இ.எல்.எஸ்.எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) வகையைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

இந்தவகை ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின்கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு (ரூ.1,50,000 வரைக்கும்) வருமான வரி விலக்கு கிடைக்கும்.

80சி பிரிவின்கீழ் இ.எல்.எஸ்.எஸ் திட்டங்கள் உள்பட, பி.எஃப், பி.பி.எஃப், அஞ்சலக சேவிங்ஸ் திட்டங்கள், வங்கி டெபாசிட்டுகள், இன்ஷூரன்ஸ் எனப் பல வகை முதலீடுகள் இருக்கின்றன. இவை அனைத்திலும் மிகவும் குறுகிய கால லாக்-இன் உடையவை இ.எல்.எஸ்.எஸ் திட்டங்கள்தான். மேலும், நீண்ட காலத்தில், வேறு சேவிங்ஸ் மற்றும் முதலீட்டுத் திட்டங்களைவிட அதிக வருமானம் தரவல்லதும் இந்த வகைத் திட்டங்கள்தான்.

இந்த வகைத் திட்டங்களில் மொத்தமாகவோ அல்லது எஸ்.ஐ.பி முறையிலோ முதலீடு செய்து கொள்ளலாம். குரோத் ஆப்ஷன் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன் ஆகிய இரண்டும் உள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகளில் டிவிடெண்டுக்கு வரி உள்ளதால், பணம் தேவைப்படாதவர்கள் குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்வதே சரி. எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது, முதலீடு செய்யும் ஒவ்வொரு மாத முதலீட்டிற்கும் 36 மாதங்கள் லாக்-இன் ஆகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick