“வங்கித் துறை வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்!”

கோபால் அகர்வால், ஃபண்ட் மேனேஜர், டி.எஸ்.பி பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் துறையில்  20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட வரும் டி.எஸ்.பி பிளாக்ராக் மியூச்சு வல் ஃபண்டின் மூத்த ஃபண்ட் மேனேஜருமான கோபால் அகர்வால் அண்மையில் சென்னை வந்திருந்தார். அவர் நாணயம் விகடன் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி...

மாநிலத் தேர்தல் முடிவுகள், ஆர்.பி.ஐ கவர்னர் மாற்றத்துக்குப்பிறகும் இந்தியப் பங்குச் சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறதே!
 
“கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்தல் போன்ற காரணங்களாலும் சந்தை ஏறத் தொடங்கி இருக்கிறது. இதனால் ஆர்.பி.ஐ வட்டியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தால் சந்தை மீண்டும் ஏற ஆரம்பித்து விடும்.

கச்சா எண்ணெய் விலை, அரசியல் நிலைமை, அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் போன்ற வற்றைப் பொறுத்து இந்தியப் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் இருக்கும். இந்த நிலையில் எடுக்கும் ரிஸ்க்குக்கேற்ப ரிவார்ட் கிடைக்கும்.”

பங்குச் சந்தையின் போக்கு நீண்ட காலத்தில் எப்படி இருக்கும்?

“இப்போது சந்தையின் சுழற்சியில் கீழ் நிலையில் இருக்கிறோம். இந்த நிலை விரைவில் மாறும்.  அந்த வகையில், இந்தியப் பங்குச் சந்தை குறுகிய காலத்தில் பாசிட்டிவாக இருக்கும். நடுத்தரக் காலம் மற்றும் நீண்ட காலத்தில் மிகவும் பாசிட்டிவாக இருக்கும்.’’

அடுத்த ஐந்தாண்டுகளில் எந்தத் துறைகள் சிறப்பான வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கிறீர்கள்?

“வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட நுகர்வோர் பொருள்கள் துறை மற்றும் கேப்பிட் டல் கூட்ஸ் பொருள்கள் துறைகள் நடுத்தரம் முதல் நீண்ட காலத்தில் நல்ல வளர்ச்சியை அடையும் என மதிப்பிட்டுள்ளோம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick