விவசாயக் கடன் தள்ளுபடி... பிரச்னைகளுக்குத் தீர்வா?

வாசு கார்த்தி

விவசாயக் கடன் தள்ளுபடிதான் கடந்த வாரத்தின் பலரும் பேசிய முக்கியச் செய்தி. “விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால்,  பிரதமர் மோடியைத் தூங்கவிட மாட்டேன்” என்று சூளுரைத்திருக்கிறார் ராகுல் காந்தி.

மத்தியப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்ற கமல்நாத், தன்னுடைய முதல் கையெழுத்தாகக் கடன் தள்ளுபடி குறித்த ஆணையைப் பிறப்பித்திருக்கிறார். சத்தீஷ்கர், ராஜஸ்தான் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களும் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து அரசாணையை வெளியிட்டிருக் கின்றன.

குறைந்தபட்ச ஆதரவு விலை

நம் நாட்டில் விவசாயிகளின் பிரச்னை பெரிது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 70 சதவிகித இந்தியர்கள் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் கடன் வாங்கி விவசாயத்தைச் செய்யும் சூழல் இருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு  உயர்த்தினாலும் இந்த விலைக்குப் பொருள்கள் வாங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே இருக்கிறது.

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (என்.எஸ்.எஸ்.ஓ)  தரும் தகவல்படி 6% விவசாயிகளுக்கே குறைந்தபட்ச விலை கிடைக் கிறது. அதுவும் நெல் மற்றும் கோதுமை போன்ற பயிர்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த விழிப்பு உணர்வு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick