தொழிற்சாலைகள், விமான நிலையம், துறைமுகம்... அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராகும் சென்னை நகரம்!

நானூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த சென்னை நகரம், அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராகி வருகிறது. புதிய சாலைகள் உருவாக்கம், துறைமுகங்களில் நடக்கும் விரிவாக்கம், விமான நிலையத்தில் நடந்துவரும் கூடுதல் வசதி எனப் பல விஷயங்கள் வேகமாக நடக்கத் தொடங்கி இருக்கின்றன. கன்ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரி (CII) அமைப்பு சென்னையில் ‘சென்னை இன்ஃப்ரா’ என்கிற கருத்தரங்கத்தை கடந்த வாரம் நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பலரும் சென்னையில் புதிதாக மேற்கொள்ளப் பட்டுவரும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடந்துவரும் இந்தக் கருத்தரங்கில் முதலில் பேசினார் ஈஷா ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் கிருஷன்.

‘‘சென்னை முழுக்க புதிய தொழிற்சாலைகள் வரவர புதிய சாலை வசதிகள் வரவேண்டும்; பள்ளி, கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும்; மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரகடம் பகுதியில் பல தொழிற்சாலைகள் வந்துவிட்டன. ஆனால், பெரிய அளவில் பள்ளிகளோ, கல்லூரிகளோ, மருத்துவமனைகளோ அங்கு வரவில்லை. தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் எல்லா க்ளஸ்டர்களிலும் வரவேண்டும். அது இல்லை, இது இல்லை என்று நாம் குறை சொல்லிக்கொண்டிருப்பதை விட, நமக்கு என்ன வசதிகள் தேவை என்று தமிழக அரசிடம் சொல்வோம். இதுதான் பாசிட்டிவான அணுகுமுறை’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick