உங்களுக்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

மக்குக் கிடைக்கும் நேரத்தில் பெரும்பகுதியைக் கொள்ளையடிப்பதாக உள்ளன சமூக வலைதளங்கள். ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் நமது பெருவாரி யான நேரத்தை வீணடிக்கிறோம். அப்படி இல்லையெனில், தொலைக்காட்சி முன்பு மணிக்கணக்கில் உட்கார்கிறோம், நண்பர்களுடன் அரட்டையடித்துப் பொழுதைக் கழிக்கிறோம். இப்படி இல்லாமல், அன்றாடம் நமக்குத் தேவையான முக்கியமான விஷயங்களில் மட்டும் நம்முடைய முழுக் கவனத்தையும் செலுத்தினால், அது நமது முன்னேற்றத்துக்கு நிச்சயம் வழிவகுப்பதாக இருக்கும் இல்லையா? ஜேக் க்னாப் மற்றும் ஜான் செராட்ஸ்கி என இரு ஆசிரியர்கள் இணைந்து எழுதிய ‘மேக் டைம்’ என்னும் புத்தகம் நமக்கு அந்த சூட்சுமத்தை அழகாக எடுத்துச் சொல்கிறது.

இன்று மனிதர்களின் உரையாடலைக் கொஞ்சம் கவனியுங்கள். ‘எப்படி இருக்கீங்க..?’ என்ற கேள்விக்கு, ரொம்ப பிஸி என்பதுதான் பதிலாக இருக்கிறது. மனிதர் களின் காலண்டர் எப்போதுமே பிஸியாக இருப்பதைப் போல் காட்டுகிறது. ஆனால், மாலையில் நாம் எதை இன்று உருப்படியாகச் செய்தோம் என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் தோன்றவே செய்கிறது. இந்தப் பைத்தியக்காரத்தனமான வாழ்க்கையின் வேகத்தைக் குறைப்பது எப்படி? நாம் பிஸியாக இருப்பதைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு,  குறைந்த அளவு கவனச்சிதறலுடன் செயல்பட்டால், நமது  வாழ்க்கையை அனுபவித்தும் வாழ முடியும் என்கின்றனர் இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick