செயற்கை நுண்ணறிவு... ரோபோக்கள் நம் வேலைகளைப் பறித்துவிடுமா?

ந்திரன் - 2.0 வந்தபிறகு ரோபோக்கள் பற்றி மீண்டும் பேச்சு எழுந்திருக்கிறது. ரோபோக்கள் வந்தால், மனிதர்கள் செய்யும் வேலைகள் பறிபோய்விடும் என்று நினைத்து, பலரும் பயப்படுகிறார்கள். தொழில்நுட்பங்கள் நமக்கு நன்மை செய்யப்போகிறதா அல்லது நமக்குப் பல அசெளகர்யங்களைத் தரப்போகிறதா என்பதை அறிவியல்பூர்வமாக எடுத்துச்சொல்லும் ஒரு கருத்தரங்கை கடந்த வாரம் சென்னையில் நடத்தியது எஃப்.ஐ.சி.சி.ஐ (Federation of Indian Chambers of Commerce & Industry). ‘டிஜிட்டல் டிஸ்ரப்ஷன் அண்ட் ட்ரான்ஸ் ஃபார்மேஷன்’ (Digital Disruption and Transformation) என்கிற நடந்த இந்தக் கருத்தரங்கில் சொல்லப்பட்ட முக்கியமான விஷயங்கள் இனி...

மாற்றமே முன்னேற்றம்

“விலங்குகளில் மிகவும் வலிமையானவையோ, மிகவும் புத்திசாலியானவையோ நீடிப்பதில்லை, மாற்றத்திற்குத் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் அதை ஏற்றுக்கொள்ளும் விலங்குகள்தான் அழியாமல் தலைமுறைகள் கடந்து வாழ்கின்றன என்றார் சார்லஸ் டார்வின். இது நமக்கும் பொருந்தும். இந்த டிஜிட்டல் மாற்றத்துக்குத் தயாராவதும், அதை ஏற்றுக்கொள்வதும்தான் இன்றைய நாளில் உங்களையும், உங்கள் நிறுவனத்தையும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்” என்றார் வரவேற்புரையில் பேசிய இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் கே.தினேஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick