ஏற்ற இறக்க சந்தை... ரிஸ்க் குறைவான ஸ்மார்ட் ஃபண்டுகள்!

க்விட்டி ஃபண்டுகள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை தரும் என்றாலும், குறுகிய காலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்களால் தாங்குவதற்குச் சற்று சிரமமாக உள்ளது. அதேசமயத்தில், வங்கி டெபாசிட்டுகள் போன்ற நிரந்தர வருமானம் தரும் திட்டங்கள், குறைவான லாபத்தையே கொடுக்கின்றன. இவை இரண்டிற்கும் இடையே அதாவது, குறைந்த ஏற்ற இறக்கத்துடனும், ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் தரும் திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று பெரும்பாலான முதலீட்டாளர்கள் தேடுகின்றனர். “நாங்கள் மூன்று வருடங்களுக்கு மேல் முதலீட்டை வைத்திருக்கத் தயார், ஆனால், அதிக ஏற்ற இறக்கம் இல்லாத எல்லாக் காலத்திற்கும் ஏற்ற எவர்கிரீன் ஃபண்டுகளாக வேண்டும் என நினைப்பவர்களுக்காக ஆறு ஃபண்டுகளை  தந்துள்ளோம். இவை கடன் பத்திரங்களிலும், ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகளிலும் சேர்த்து முதலீடு செய்து, ஃபண்டுகளின் வருமானத்தில் நிகழும் ஏற்ற இறக்கத்தை வெகுவாகக் குறைத்து விடுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick