ஃபாரீன் டூர்... நிம்மதி தரும் பயணக் காப்பீடு!

முனைவர் க.நெல்லைசந்தர்

முன்பு நம்மில் பலரும் பக்கத்தில் இருக்கிற சுற்றுலாத்தலங்களுக்கு மட்டுமே சென்று வருவோம். ஆனால், இப்போது நம்மவர்களில் பலருக்கும்  வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுவர வேண்டும் என்கிற ஆசை பிறந்திருக்கிறது. பாஸ்போர்ட், விசா எடுப்பதற்கான நடைமுறைகள் எளிதாகி விட்டன. விமானச் சேவை நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பயணக் கட்டணத்தைக் குறைத்துவருகின்றன. இதனால் பலரும் குடும்பத்தோடு வெளிநாடு சென்றுவரத் தொடங்கியிருக்கின்றனர்.

வெளிநாட்டுக்குப் பயணம் செய்யும்போது, எதிர்பாராத அசம்பாவிதம் நடந்துவிட்டால், செலவிடும் தொகை கற்பனையில்கூட நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு மிக அதிகமாக உள்ளது. வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்குமுன்பே  சரியாகத் திட்டமிட்டு, வெளிநாட்டுக்கான பயணக் காப்பீட்டை எடுத்தால், இது மாதிரியான எந்தச் சிக்கல் வந்தாலும் பாதிப்பில்லாமல் தப்பிக்கலாம். இதற்கான பிரீமியமாக சில ஆயிரம் ரூபாய்களைச் செலவிட வேண்டியிருந்திருக்கும்.

ஒருவர் நம் நாட்டுக்குள் சுற்றுப்பயணம் செல்லும்போது  ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அவர் ஏற்கெனவே எடுத்து வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் இழப்பீட்டை பெறலாம். ஆனால், வெளிநாடுகளில்  பயணம் செய்யும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், நாம் எடுத்திருக்கும் எந்த இன்ரஷூன்ஸ் பாலிசி மூலமும் இழப்பீடு பெற முடியாது.

எனவே, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிற பயணிகளின் தேவைக்கேற்ப நிறுவனங்கள் பலவகையான காப்பீடுத் திட்டங்களை அளித்து வருகின்றன. அந்தத் திட்டங்கள் பற்றி பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick