பணத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: டாலர்ஸ் அண்ட் சென்ஸ் (Dollars and Sense: How We Misthink Money and How to Spend Smarter)

ஆசிரியர்கள்:
டான் ஆர்லி மற்றும் ஜெஃப் க்ரெய்ஸ்லர் (Dan Ariely and Jeff Kreisler)

பதிப்பகம்: Harper

‘‘பணத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பதில் தவறேதுமில்லை. ஆனால், அப்படி சிந்திப்பதன் மூலம் நம்மால் பணம் குறித்த சிறப்பான பல முடிவுகளை எடுக்க முடிய வேண்டும். நடப்பில் அது சாத்தியமா என்று பார்த்தால், மனித இனமே பணம் குறித்த தவறான முடிவுகளை எடுக்க படைக்கப்பட்டதைப் போன்ற தோற்றமே பெரும்பாலும் தெரியும். காரணம், பணச் சிக்கலை உருவாக்கிக் கொள்வதில் நாம் அனைவரும் கைதேர்ந்தவர்களாக இருக்கிறோம். இல்லையா?’’ என நெத்திப்பொட்டில் அடித்தமாதிரி ஒரு கேள்வியுடன் தொடங்குகிறது இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கிற புத்தகம்.

ஆர்லி மற்றும் ஜெஃப் க்ரெய்ஸ்லர் என இருவர் இணைந்து எழுதிய ‘டாலர்ஸ் அண்ட் சென்ஸ்’ என்கிற இந்தப் புத்தகம் பண ரீதியான விபத்துகள் என்றால் என்ன, அவை நம் வாழ்வில் வராமல் பார்த்துக்கொள்வது எப்படி என்பதை விரிவாக எடுத்துச் சொல்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick