கம்பெனி ட்ராக்கிங்

லாரஸ் லேப்ஸ் லிமிடெட்! - (NSE SYMBOL: LAURUSLABS)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பார்மா துறையில் இயங்கிவரும் நிறுவனம் லாரஸ் லேப்ஸ் லிமிடெட். இது ரிசர்ச் அண்டு டெவலப்மென்ட் வசதிகளுடன் கூடிய மருந்துகள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாகும்.

2005-ம் ஆண்டில் ஒரு பிரைவேட் லிமிடெட் -ஆக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 2006-ம் ஆண்டில் ஹைதராபாத்தில் ஆராய்ச்சி வசதியுடன் வர்த்தகரீதியான செயல்பாட்டினை ஆரம்பித்தது. அதே ஆண்டில், முதல் காப்புரிமைக்கான விண்ணப்பத்தையும் செய்தது.

2007-ம் ஆண்டில் விசாகப்பட்டினத்தில்    ஏ.பி.ஐ-யை (ஆக்டிவ் பார்மெக்யூட்டிகல் இன்க்ரிடியன்ட்ஸ்) உற்பத்தி செய்யும் வசதியை நிறுவிய இந்த நிறுவனம், சிங்கப்பூரைச் சேர்ந்த அப்டுயிட் எனும் நிறுவனத்திடமிருந்து முதலீட்டைப் பெற்றது. அதே வருடத்தில் மூன்று பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்காக மருந்து தயாரிக்கும் பணியை மேற்கொள்ள ஆரம்பித்தது.

2008-ம் ஆண்டில், அமெரிக்க எஃப்.டி.ஏ-வில் ஒரு குறிப்பிட்ட மருந்து தயாரிப்புக்கான தொழில் நுணுக்கங்களை விவரிக்கும்கோப்பினைத் தாக்கல் செய்த இந்த நிறுவனம், விசாகபட்டினத்தில் நிறுவப்பட்ட முதலாவது யூனிட்டில் மருந்தினை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. அதே வருடத்தில் இந்த நிறுவனம், தன்னுடைய உற்பத்தி வசதியில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்தினை அமெரிக்கா வுக்கு அனுப்பியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்