பட்ஜெட் 2018... தொழில்துறைக்கு ஏமாற்றமா? | Budget 2018 - disappointing for Industry? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/02/2018)

பட்ஜெட் 2018... தொழில்துறைக்கு ஏமாற்றமா?

பட்ஜெட் 2018 ஸ்பெஷல்

திர்வரும் 2018-19-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. இந்த பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கும், கிராம முன்னேற்றத்துக்கும் அதிக அளவிலான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்கிறார்கள் பலர். தொழில் துறைக்கு எதிர்பார்த்த நிறைய விஷயங்களைச் செய்யவில்லை எனத் தொழில் துறை வட்டாரத்தில் பலத்த குரல் ஒலிக்கவே செய்கிறது. சிறு குறு தொழில்களுக்கு ஏற்றம் தரும் விஷயங்கள் ஏதாவது இந்த பட்ஜெட்டில் உள்ளதா, ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமான விஷயங்கள் ஏதாவது உள்ளதா என்பது போன்ற பல்வேறு கேள்விகளுடன் தொழில் துறையினர் சிலரைச் சந்தித்துப் பேசினோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

‘‘நிறுவனங்களுக்குத் தனி எண் தருவது நல்ல விஷயம்!’’


கவின்கேர்  சி.கே.ரங்கநாதன், தலைவர்,

 ‘‘ரூ.250 கோடி ரூபாய்க்குக் குறைவாக வர்த்தகம் செய்யும் நடுத்தர நிறுவனங்களின் கார்ப்பரேட் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகக் குறைத் திருப்பது நல்ல முடிவே. 

நடுத்தர நிறு வனங்களின் வளர்ச்சிக் காகவும், நெடுஞ்சாலை, ரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைக்கு அதிகளவில் ஒதுக்கீடு செய்திருப்பதும், முத்ரா யோஜனா திட்டத்தில் அதிக அளவில் கடன் தர இலக்கு நிர்ணயித்திருப்பதும் அமைப்புசாரா நிறுவனங்களின் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்க வாய்ப்பாக அமையும்.

தொடரும் ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களும், ஆன்லைன் வழியே வருமான வரித் தாக்கல் செய்வதும், பணப் பரிவர்த்தனைக் கட்டுப்பாடுகளும், ஆதார் எண் போல் நிறுவனங்களுக்குத் தனி எண் வழங்க முடிவு செய்திருப்பதும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்துவதும் பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு முக்கியமான விஷயங்கள். சுருக்கமாக, இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பட்ஜெட் என்று சொன்னால் அதில் எந்தத் தவறும் இல்லை”.

[X] Close

[X] Close