ஃபண்ட் டேட்டா! - 12 - சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்... - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

த்திய அரசின் பட்ஜெட் 2018-ல்  பிரதானமாக இருந்தது கிராமப்புற இந்தியாவுக்கான திட்டங்கள்தான். ஆகவே, கிராமப்புறங்களை அடிப்படையாக வைத்தும் தொழில் செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும் எனலாம். மேலும், இன்று கிராமப்புறங்களில்தான் அதிகமான மக்கள்தொகை உள்ளது. அங்குதான் இன்னும் பூர்த்தியாக வேண்டிய தேவைகள்/கனவுகள் பல உள்ளன.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக கிராமப்புறங்கள் இருக்கப் போகின்றன. இந்தக் கருவின் அடிப்படையில் இயங்கிவருவதுதான் சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட். இனிவரும் காலத்தில் கிராமப்புற வளர்ச்சியில் அரசாங்கத்தின் கவனம் அதிகமாக இருக்கும் என்பதே இந்த ஃபண்டை நாம் பரிந்துரைக்கு எடுத்துக்கொண்டதற்கான முக்கியக் காரணம் ஆகும்.

இது ஒரு மல்ட்டிகேப் ஃபண்டாகும். இதன் போர்ட்ஃபோலியோவில் சுமார் 52% லார்ஜ்கேப் பங்குகளிலும், எஞ்சியது ஸ்மால் அண்டு மிட்கேப் பங்குகளிலும் உள்ளது.

கிராமப்புறங்களில் கனிசமாக தொழில் செய்யும் நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யூனிலீவர், மஹிந்த்ரா & மஹிந்த்ரா, ஐ.டி.சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மாருதி போன்ற நிறுவனங்களிலும் இன்னும் பல நிறுவனங்களிலும் தனது முதலீட்டை வைத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick