கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - லாபம் தரும் பால்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மதிப்புக் கூட்டல் தொடர் - 9

ன்றைய தேதியில் நம் வீடுகளில் ஆக்கிரமித்துள்ள உணவுப் பொருள்களில் பெரும்பாலானவை மதிப்புக் கூட்டல் செய்யப் பட்ட பொருள்கள்தான். ரெடிமேடாகக் கிடைக்கும் உணவுப்பொருள் தொடங்கி இட்லி மாவு வரைக்கும் நம் சமையலறையில் இடம் பிடிக்கத் தொடங்கிவிட்டன. இனிவரும் நாள்களில், நம் வீட்டில் இருக்கும் மதிப்புக் கூட்டல் செய்யப்பட்ட பொருள்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகுமே தவிர, குறையாது. 

கடந்த 2015-ம் ஆண்டில், மதிப்புக் கூட்டல் தொழிலில் உலக அளவில் இந்தியா ஐந்தாம் இடமும், 2016-ம் ஆண்டில் மூன்றாம் இடமும் பிடித்திருந்தது. மதிப்புக் கூட்டல் தொழிலைப் பொறுத்தவரையில் இந்தியா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இங்கே குறிப்பிடத் தக்க விஷயம், மதிப்புக் கூட்டல் தொழில், லாபம் என்பதைத் தாண்டி உணவுப் பொருள் வீணாவதைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாளுக்கு நாள் பெருகிவரும் உணவுப்பஞ்சத்தைப் போக்க, எதிர்காலத்தில் மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிகப் பெரிய அளவில் இருக்கும்.

மதிப்புக் கூட்டலைப் பொறுத்தவரை, பல  பெண்களும் பெண் குழுக்களும் வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர். அதில் திருப்பூர் மாவட்டம், கன்னிவாடி அருகிலுள்ள கருப்பன்வலசு கிராமத்தைச் சேர்ந்த  கலைமகள் குறிப்பிடத்தக்கவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிப்புக் கூட்டல் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick