பட்ஜெட் 2018: நீண்ட கால மூலதன ஆதாய வரி... கணக்கிடுவது எப்படி?

சி.சரவணன்

த்திய பட்ஜெட் 2018-19-ல், பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த  மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி 10 சதவிகிதமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதால், சந்தை இறக்கம் காண்பதற்கு அது ஒரு காரணமாக அமைந்தது. இப்போது சந்தை, இறக்கத்திலிருந்து ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது.

2004-05-ம் ஆண்டு பட்ஜெட்டில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அதற்குமுன் இருந்த நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு வரியை நீக்கினார். இப்போது அருண் ஜெட்லி அதனை மீண்டும் கொண்டுவந்திருக்கிறார்.

பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால  மூலதன  ஆதாய வரி, ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்குத்தான். பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளை ஓராண்டுக்குள் விற்றால், அதற்கு இப்போது குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% உள்ளது. இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் வரி விதிப்பில், நிதியாண்டில் ரூ.1 லட்சத்துக்கு மேற்படும் லாபத்துக்குத்தான் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் 10% வரி கட்ட வேண்டும். 

கடன் சார்ந்த ஃபண்டுகளில் மூன்றாண்டுகளுக்கு முன் விற்றால், அவரவர் வருமான வரி வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். மூன்றாண்டுகளுக்குப் பிறகு விற்றால், நீண்ட கால மூலதன ஆதாய வரியாக, பணவீக்க விகிதச் சரிகட்டலுக்குப்பிறகு 20% வரி கட்ட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick